fbpx

தமிழகமே… 2 ஆண்டுக்கு பின் 100-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…! 104 பேர் சிகிச்சை…!

தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முதல் முறையாக கடந்த 8ம் தேதி கேரளாவில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து, அனைத்து மாநில சுகாதாரத்துறை நேற்று ஆலோசனை நடத்தியது.

தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 292 புதிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் தேசிய தலைநகரம் டெல்லியிலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் புதிதாக 308 பேருக்கு உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கிறிஸ்துமஸ் பண்டிகையில் ஸ்டார் ஏன் வீட்டில கட்டி தொங்க விடுறாங்க தெரியுமா.? அதன் வரலாற்றுப் பின்னணியும் காரணங்களும்.!

Fri Dec 22 , 2023
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களின் முக்கியமான பண்டிகையாகும். தேவ தூதரான இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்துவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வருடத்தின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்களே மீதம் இருக்கிறது. பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்தவ மக்களின் வீட்டில் கிறிஸ்துமஸ் ஸ்டார் […]

You May Like