தமிழ் சினிமாவின் பொக்கிஷமான நடிகை என்றால் அது கட்டாயம் மனோரம்மா தான். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தவர் தான் இவர். தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படுபவர் இவர். இவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
1500-க்கும் மேற்பட்ட படங்களிலும், 5000-க்கும் அதிகமான நாடகங்களிலும் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர் இவர். தனது வாழ்கையை கலைக்காக அர்ப்பணித்த அவர், கலைமாமணி விருது, பத்ம ஸ்ரீ விருது, அண்ணா விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். அதே சமயம் இவர் மூன்று தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
குணச்சித்திர வேடங்களில் நடிக்க இவரை விட சிறந்த நபர் இருக்கவே முடியாது. எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும், அதே கதாப்பாத்திரமாகவே மாறிவிடுவார். இதனால், இன்று வரை அவரது இடத்தை நிரப்ப யாருமில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர், நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என்று திரும்பும் திசை எல்லாம் தனது பெயரை நிலைநாட்டினார்.
அந்த வகையில், இவர் நடிப்பில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து ‘பொன்விழா’ கொண்டாடினார். இவருக்கு இருக்கும் தனி பெருமை என்னவென்றால், இவர் ஐந்து முதலமைச்சர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். கா. ந. அண்ணாதுரை, முத்துவேல் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா ஜெயராம் மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.
மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார். இவரால் என்னதான் மக்கள் வயிறு குலுங்க சிரித்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. இதற்கு முக்கிய காரணம் என்றால் அது அவரின் காதல் கணவர் தான். ஆம், இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் பணிபுரிந்த நாடக கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தான் எஸ்.எம்.ராமநாதன். மனோரம்மா இவரை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Read more: சொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தை!!! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..