fbpx

சைனஸ் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!… இந்த கீரையை மட்டும் சாப்பிடுங்கள்!

சைனஸ் பிரச்சனைகளுக்கு விடைக் கொடுக்கும் அகத்திக் கீரை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

அகத்திக்கீரை, சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி சீமை அகத்தி எனப் பல வகைகள் உண்டு.
பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை. அகத்தி கீரையில் வைட்டமின் ஏ மற்றும் அயோடின் சத்துக்கள் நிறைந்துள்ளது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற அகத்திக்கீரை மிகவும் நல்லது. சூட்டை தணிக்கவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் நீக்க கூடியது. பருப்புடன் இந்த கீரையை கூட்டாக சேர்த்து சாப்பிட்டால் செரிமான தொந்தரவுகளும், வயிற்றில் உள்ள புழுக்கள் நீங்கும்.

அகத்தி கீரை சாற்றை இரண்டு மூன்று சொட்டுகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் மூக்கடைப்பு, தலைவலி, அடிக்கடி காய்ச்சல் வருவது நீங்கும். அகத்திக்கீரை சாற்றை தலையில் தேய்த்து குளிக்க மனநல பாதிப்புக்கள் குணமாகும். ஒரு பங்கு அகத்திக் கீரை சாறுடன் 5 பங்கு தேன் சேர்த்து நன்றாக உச்சந்தலையில் விரல்களால் தடவ வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கோர்வை பிரச்சினை சரியாகும். சீமை அகத்தி கீரையின் சாற்றை வயிறு மற்றும் தொடைப் பகுதியில் ஏற்படும் படர்தாமரைகளில் தடவி வந்தால் விரைவில் குணமாகும். கை கால்களில் காயம் ஏற்பட்டால் அகத்திக் கீரையை வைத்து கட்டினால் காயம் ஆறிவிடும். அகத்திக்கீரை அடிக்கடி சாப்பிடக் கூடாது ஏனெனில் வயிற்றுப்போக்கு மற்றும் சொறி சிரங்கு முதலியன பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Kokila

Next Post

அடிதூள்..! வாட்ஸ் அப்பில் வந்த புதிய அப்டேட்… WhatsApp Channel என்னும் அம்சம் அறிமுகம்...!

Sat Jun 10 , 2023
வாட்ஸ் அப் பயனர்களின் வசதிக்காக “வாட்ஸ் அப் சேனல்ஸ்” என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட்களை கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி பயனர்களின் வசதிக்காக “வாட்ஸ்அப் சேனல்ஸ்” என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக “வாட்ஸ்அப் சேனல்ஸ்” என்ற புதிய அம்சத்தை […]

You May Like