fbpx

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து வெளியேறியது துணை ராணுவ படை……! ஆயுதப்படை காவலர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது ஓமந்தூரார் மருத்துவமனை…..!

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

இதற்கு நடுவே அவருக்கு நெஞ்சு வலி உண்டானதால் சென்னை ஓமந்தூரார் அரசு பல்லாக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு செந்தில் பாலாஜிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மேலும் செந்தில் பாலாஜியை நேற்று பரிசோதனை செய்த மருத்துவர்கள் இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்தனர்.

இந்த இல்லையில்தான் அமலாக்கத் துறையினரின் கோரிக்கையை ஏற்று மருத்துவமனைக்கு நேரில் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அடுத்து புழல் சிறைத்துறை நிர்வாகத்தின் கீழ் செந்தில் பாலாஜி கொண்டுவரப்பட்டார். ஆகவே அவரது பாதுகாப்பு பொறுப்பை ஆயுதப்படை அதிகாரிகளிடம் அமலாக்கத் துறையினர் ஒப்படைத்தனர். எனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாதுகாப்பு வழங்கி வந்த மத்திய துணை ராணுவ படை வீரர்கள் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்

Next Post

நாட்டில் 2,067 பேர் கொரோனா தொற்று சிகிச்சையில் இருக்கிறார்கள்…..! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்…..!

Thu Jun 15 , 2023
நாட்டில் நோய் கற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,067 ஆக பதிவாகி இருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 106 பேருக்கு நோய் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நோய் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 4,49,93,186 என அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் […]

You May Like