fbpx

கொள்ளையடிக்க வந்தவர்கள் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்..!! கத்தி முனையில் பலமுறை..!! அதிர்ச்சி சம்பவம்..!!

அடுக்குமாடி குடியிருப்பில், பெண்ணிடம் இருந்த நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள், அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு திருடர்கள், கத்தி முனையில் 27 வயது பெண்ணின் நகைகளை கொள்ளையடித்ததுடன், அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். புவனேஸ்வரில் உள்ள மைத்ரி விஹாரில் அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

முதலில் கத்தி முனையில் பெண்ணின் நகைகள், மொபைல் ஃபோனை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். பின்னர், தங்களுடன் உடலுறவு கொள்ள வேண்டுமென்றும், இல்லையென்றால் இரண்டு வயது மகளை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அப்பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அந்த குடியிருப்பில் குடியேறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மூங்கில் கம்புகளை பயன்படுத்தி திருடர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உயரதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : Flipkart நிறுவனத்தில் வேலை..!! இந்த கல்வித் தகுதி இருந்தாலே போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

In an apartment, robbers robbed a woman of her jewelry and gang-raped her.

Chella

Next Post

அதிகாலையிலே கோர விபத்து.. டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 தொழிலாளர்கள் பலி..!!

Fri Oct 4 , 2024
Major road accident in UP's Mirzapur; 10 workers dead as truck hits tractor-trolley

You May Like