சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலத்தில், அவ்வப்போது பல விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. crazy videos என்ற X தள பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோவில் ஒரு பெண் தன் துணையுடன் பில்லியர்ட்ஸ் விளையாட்டை விளையாடி கொண்டிருக்கிறார்.
நேர்த்தியான கருப்பு மேலாடை மற்றும் அதற்கு ஏற்ற ஜீன்ஸ் அணிந்த அந்தப் பெண், தனது துணையுடன் விளையாட்டில் கவனம் செலுத்துகிறாள். ஆரஞ்சு நிற டி-சர்ட் அணிந்த மற்றோரு ஆண், பானங்கள் கவுண்டருக்கு அருகில் மது போதையில் தடுமாறி வந்து, அந்த வழியாக விளையாடிக் கொண்டிருக்கும் அந்த பெண்ணின் பின்புறக் கால்களைத் தடவுகிறார். தப்பாக நடக்கும் அந்த ஆணின் கைகளை தள்ளி விட்டு அந்த பெண் அங்கிருந்து சற்று நகர்கிறாள்.
அப்போது இந்த நடவடிக்கையை கவனித்த அந்த பெண்ணின் ஆண் துணை, ஆரஞ்சு நிற டி-சர்ட் அணிந்து தவறாக நடந்த ஆணின் முகத்தில் ஒரு குத்து வைக்கிறார். அவரின் பலம் வாய்ந்த அந்த குத்தின் காரணமாக ஒரே அடியாக சரிந்து விழுந்துவிடுகிறான். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Never touch another mans wife pic.twitter.com/4aTxZoNR7k
— Crazy Videos 🔞 (@CrazyyHub) March 21, 2025