ரூபாய் நோட்டுகளில் எழுதினால் செல்லாது என்ற தகவல் போலியானது என PIB விளக்கம் அளித்துள்ளது.
பொதுவாக மாணவர்கள் விளையாட்டாக ரூபாய் நோட்டுகளில் தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பெயர்களையோ அல்லது கையொப்பம் விடுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுபோன்ற நோட்டுக்களை பார்த்தால் பலர் கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இந்த நிலையில் தான் ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இதற்கு விளக்கமளித்துள்ள PIB Fact Check அமைப்பு, அந்த தகவலில் உண்மை இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி அத்தகைய வழிகாட்டுதல்களை வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது, ஆனால் ரூபாய் நோட்டுகளில் எழுதினால் நோட்டின் ஆயுள் குறையும் என கூறியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.. இதனை தடுக்கும் விதமாகப் பத்திரிகை தகவல் பணியகம் டிசம்பர் 2019 இல் இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவை தொடங்கியது. அதன் நோக்கம் “பல்வேறு சமூக வலைதளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் கண்டு, அதனுடைய உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.