அரசு வேலையில் சேரும் நபர்கள் பின்னணி குறித்து விசாரிக்க போலீஸ் வீட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நிகழ்கிறது. இதனை காவல்துறையும் தடுக்க முடியாத சூழல் உருவாகிறது. அரசு ஊழியர் சங்கத்தினர் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஒரு பக்கம் இருந்த வருகிறது.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கையில், தனிப்பட்ட விவரம் குறித்து விசாரிக்க போலீசார் வீட்டுக்கு வருவது உண்டு. இனி அதுபோல் அரசு வேலையில் சேருவோருக்கும் அவர்களின் பின்னணி குறித்து விசாரிக்க போலீஸ் வீட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தவறான நபர்கள் அரசு வேலையில் சேருவதை தடுக்க இது உதவும். தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்று போலீசுக்கு இதுகுறித்து உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.