fbpx

Gold Rate : இன்றும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28ஆம் தேதி ஒரு பவுன் ரூ.50,000 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்டது.

இதனால் அன்றைய தினம் சவரனுக்கு ரூ.2,080 குறைந்தது. பின்னர், தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக, தீபாவளியன்று ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. பின்னர், ஏற்ற இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை, இரண்டு நாட்களாக இறங்கு முகத்தில் உள்ளது.

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 45-க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.55 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,935-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து 99 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; மது பிரியர்களே.. டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் முக்கிய மாற்றம்.. இனி எல்லாம் டிஜிட்டல் தான்..!!

English Summary

The price of 22 carat gold fell by Rs.880 to Rs.55,480.

Next Post

கங்குவா படம் எப்படி இருக்கு..? போட்ட பணத்தை எடுப்பார்களா..? பயில்வான் சொன்னதை கேட்டு கடுப்பான ரசிகர்கள்..!!

Thu Nov 14 , 2024
While the Suriya starrer Ganguwa is getting mixed reviews, Bailwan Ranganathan has given a review about the film through his video.

You May Like