fbpx

7 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.. இனி தங்கம் வாங்குவது எட்டாக்கனி தான்..!! – புலம்பும் மிடில் கிளாஸ் மக்கள்!!

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது. ஆனால் தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாயாகவும், 1 சவரன் தங்கம் 56 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஒரு கிராம் தங்கம் 60 ரூபாய் அதிகரித்து, 7,060 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு சவரன் தங்கம் விலை, 480 ரூபாய் உயர்ந்து, 56,480 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று கிராம் 98 ரூபாய்க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ஒரு கிராம் வெள்ளி மூன்று ரூபாய் உயர்ந்து, கிராம்101 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 3000 ரூபாய் உயர்ந்து, கிலோ 1.01 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுறது.

Read more ; இந்த 6 எண்ணெயில் சமைக்கவே கூடாதாம்.. மருத்துவர் எச்சரிக்கை..!!

English Summary

The price of gold continues to rise. With that in mind, let’s take a look at today’s gold and silver prices.

Next Post

அடுத்த ஷாக்..!! லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குட்டிகள்..!! எந்த கோயிலில் தெரியுமா..?

Wed Sep 25 , 2024
A video of rats biting and damaging the tray and lattu packets in the Siddhi Vinayagar temple and the presence of baby rats is circulating on social media.

You May Like