fbpx

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.37,512-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,689-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.37,512-க்கு விற்பனையாகிறது… இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. வெள்ளி விலை 30 காசு உயர்ந்து ரூ.62.80-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.62,800-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

கர்நாடகாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்...

Sat Jul 9 , 2022
கர்நாடக மாநிலம் விஜயபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் இன்று காலை 2 முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.. காலை 6.22-க்கு 4.9 என்ற ரிக்டர் அளவிலும், 6.24 மணிக்கு 4.6 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.. இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.. கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் […]

You May Like