fbpx

நாடு முழுவதும் குறைய தொடங்கிய உளுந்தம் பருப்பு விலை…!

மத்திய நுகர்வோர் நலத்துறை மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக உளுந்து விலை குறையத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகளால் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. விவசாயிகளுக்கு சாதகமான விலை கிடைக்கிறது. மழைப்பொழிவு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உளுந்து சாகுபடி பரப்பை அதிகரித்துள்ளனர்.

2024 ஜூலை 5 நிலவரப்படி, உளுந்து சாகுபடிக்கான நிலப்பரப்பு 5.37 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இது சென்ற ஆண்டு இதே காலத்தில் 3.67 லட்சம் ஹெக்டேராக இருந்தது. 90 நாள் பயிரான உளுந்து உற்பத்தி கரீஃப் பருவத்தில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, மத்திய அரசின் கொள்முதல முகமைகளில் பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் மட்டும் உளுந்து பயிரிடும் 8, 487 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 1611, 2037, 1663 விவசாயிகள் முன்கூட்டியே பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்தூர், டெல்லி சந்தைகளில் 2024 ஜூலை 6 நிலவரப்படி, உளுந்தின் மொத்தவிலை முந்தைய வாரத்தைவிட, முறையே 3.1 சதவீதமும், 1.08 சதவீதமும் குறைந்துள்ளது.

English Summary

The price of urad dal has started to decrease across the country

Vignesh

Next Post

ஆஹா!. பேருந்தில் சில்லறை வாங்க மறந்துவிட்டீர்களா?. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!. புதிய வசதி!

Thu Jul 11 , 2024
Aha! Did you forget to buy some groceries on the bus? Call this number! New feature!

You May Like