fbpx

இந்த தேதிக்குள் செய்முறை தேர்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும்.. வெளியான புதிய அறிவிப்பு..

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 9-ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது செய்முறைத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. , 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 9-ம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்..

’மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க’..!! செய்முறைத் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு..!!

அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.. அதில் “ பொதுத்தேர்வு எழுதும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 9-ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களில் உடல் இயக்கக் குறைபாடு, பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி தேர்வர்களின் விருப்பத்தின் பேரில் ஆய்வக உதவியாளரை நியமிக்க வேண்டும்.

உடல் இயக்கக் குறைபாடு, பார்வை, செவித்திறன் குறைபாடுள்ள தேர்வர்களின் விருப்பத்தின் பேரில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்களில் மட்டும் செய்முறைத் தேர்வுக்கு பதிலாக செய்முறை தொடர்பான சரியான விடையை தேர்வு செய்யும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கி தேர்வில் பங்குபெறச் செய்யலாம். மதிப்பெண்களை மார்ச் 11-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Maha

Next Post

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனை….! குழந்தையை கொலை செய்து தாய் தற்கொலை….!

Wed Feb 8 , 2023
ஒரு குடும்பம் என்று இருந்தால் நிச்சயமாக குடும்பத்திற்குள் பிரச்சனை வரும் அது சகஜமான விஷயம் தான். அதற்காக தற்கொலை செய்து கொண்டால் அது ஒரு தீர்வாக இருக்காது என்பதே மனநல மருத்துவர்களின் கருத்தாக இரண்டு வருகிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி செல்வராஜ் (38) இவருக்கு சரிதா (30) என்ற மனைவியும், 3 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். சில மாதங்களாக […]

You May Like