தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. எண்ணிக்கை அதிகரிப்பு, உணவு கிடைக்காத நிலை, போக்குவரத்து இரைச்சல், விளக்கு வெளிச்சம் போன்ற காரணங்களால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு ஆக்ரோஷமாக மாறும் நாய்கள் மனிதர்களைக் கடிக்கின்றன.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். அதில், ரேபிஸ் உள்ளிட்ட தொற்றால் 30-க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 3 மாதத்தில் 4 பேர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டில் மொத்தமாக 4.8 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
கடந்த, 2023ம் ஆண்டில் 4.40 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2024ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 4 லட்சத்து 79,705 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 37,011 பேரும், தஞ்சாவூரில் 24,038 பேரும், திருச்சியில் 23,978 பேரும், புதுக்கோட்டையில் 21,490 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சென்னையில் 11,704, கோவையில் 14,453, மதுரையில் 12,024, செங்கல்பட்டில் 17,076, திருவள்ளூரில் 15,191, காஞ்சிபுரத்தில் 4,612 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read more: காசாவை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. குழந்தைகள் உட்பட 6 பேர் பலி..!!