சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை, இந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை அக்டோபர் 4 ஆம் தேதியும் ( செவ்வாய்க்கிழமை), சரஸ்வதி பூஜை அக்டோபர் 5- ம் தேதியும் நாடு முழுவதும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாட உள்ளனர்.
இந்த பூஜையையொடட்டி, செவ்வாய்க்கிழமை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதாலும், அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களும் வருவதால், இடையில் திங்கள்கிழமை மட்டும் பணியாளர்கள் விடுப்பு எடுத்தால், அவர்களுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப நல நீதிமன்றங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.