இந்திய ரிசர்வ் வங்கி 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற்றதை அடுத்து முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்துக்கு வரும் என்ற செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி 1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வரலாம் என வதந்திகள் பரவி வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்தின் நடுப்பகுதியில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமிடவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. திரும்பப் பெறப்பட்ட நாணயத் தாள்களை டெபாசிட் செய்வது அல்லது மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2000 ரூபாய் கரன்சி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கிக் கிளைக்கு சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அக்டோபர் 30-ம் தேதி வரை எந்த வங்கிக் கிளையிலும் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று ஆர்பிஐ கூறியுள்ளது. வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது வழக்கமான முறையில் இருக்க வேண்டும். அதாவது, கட்டுப்பாடுகள் இல்லாமல் தற்போதுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பிற சட்டபூர்வ விதிகளுக்கு உட்பட்டு இந்த டெபாசிட் செயல்முறை இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது