fbpx

சென்னையில் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சாலை..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

சென்னை நந்தம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பொது சாலையை, 2009ம் ஆண்டு முதல் ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, பட்டாபிராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வருவாய் துறை ஆவணங்களில் பொது சாலை என வகைப்படுத்தப்பட்டுள்ள இடத்தை ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் அங்கு உள்ள மக்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த நிலம் ராணுவத்துக்கு வழங்கப்படாத நிலையில், ராணுவ மருத்துவமனை, சாலையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், பொதுமக்கள் நலன் கருதி அதை மீட்க கோரி அளித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சாலையை மீட்டுத்தர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

Kathir

Next Post

சின்னத்திரை டூ வெள்ளித்திரை : சினி உலகில் நுழையும் நடிகைகள்…!

Wed Jan 4 , 2023
ஸ்டேஜ் ஆர்டிஸ்ட், சீரியல் ஆர்டிஸ்ட், சினிமா ஆர்டிஸ்ட் என நடிகர்களை பிரித்துப் பார்த்து வந்த காலம் எல்லாம் முற்றிலும் மாறிவிட்டது. எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் நடிகர்கள் என்ற ஒற்றை வட்டத்திற்குள் வந்து விட்டனர் இந்த காலத்து கலைஞர்கள். உதாரணமாக சின்னத்திரையில் பிரபல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகைகள் தற்போது சினிமா உலகில் நுழைந்திருக்கின்றனர். அவர்கள் யார் யார்? அவர்கள் நடிக்கும் படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த […]

You May Like