fbpx

’தினகரனோடு சேர்ந்து பாழாய்போன ஓபிஎஸ்’..! பாட்டு பாடி கலாய்த்த ஜெயக்குமார்..!

“தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பாழாய் போய்விட்டார்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வம் என்பவர் ஒரு கோஷ்டி என்றும் அவர் கட்சி அல்ல என்றும் சாடினார். கோஷ்டிக்கும் கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

’தினகரனோடு சேர்ந்து பாழாய்போன ஓபிஎஸ்’..! பாட்டு பாடி கலாய்த்த ஜெயக்குமார்..!

ஓபிஎஸ்-க்கு மக்கள் ஆதரவும் இல்லை, தொண்டர்கள் ஆதரவும் இல்லை என தெரிவித்த ஜெயக்குமார், ’சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ என்ற கர்ணன் படத்தின் பாடலை பாடி வஞ்சகன் தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பாழாய் போய்விட்டார் என விமர்சனம் செய்தார். திமுக அரசுக்கு செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் போராட்டம் நடத்தி உள்ளோம்” என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

Chella

Next Post

தமிழகத்தில் விரைவில் இடைத்தேர்தல்..? திமுகவுக்கு ஷாக் கொடுக்க அண்ணாமலை போடும் பிளான்..

Fri Sep 16 , 2022
தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. அந்த வகையில் திரை பிரபலங்கள், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களை தங்கள் கட்சியில் இணைக்க அக்கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.. அந்த வகையில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு திமுக எம்.எல்.ஏக்கள் கு.க செல்வம், டாக்டர் சரவணன் இருவரும் பாஜகவில் இணைந்தனர்.. திமுக ஆட்சி அமைந்த பிறகு கூட, திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் […]
பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அண்ணாமலை..? புதிய தலைவர் இவர்தானாம்..!!

You May Like