fbpx

மக்களே கவனம்…! செப்: 1-ம் தேதி முதல் நடக்கும் 4 அதிரடி மாற்றங்கள்…! முழு விவரம்…

சிலிண்டர் விலை குறைப்பு:

கேஸ் சிலிண்டர்கள் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படுகிறது. மாதத்தின் முதல் நாள், அரசு எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. இம்முறை செப்டம்பர் 1ம் தேதி எல்பிஜி கேஸ் விலையில் மாற்றம் செய்யப்படும். சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும்’உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ400 குறைக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இலவச ஆதார் புதுப்பிப்பு

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடுவை ஜூன் 14 முதல் செப்டம்பர் 14, 2023 வரை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. உங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பித்து 10 வருடங்கள் ஆகிவிட்டால், நீங்கள் இப்போது ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

2,000 ரூபாய் நோட்டு :

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றது. இந்த நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற நான்கு மாத கால அவகாசம் வழங்கியது. அதன்படி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இந்த நோட்டுகளை மாற்ற வேண்டும். இந்த நோட்டுகளை மாற்ற இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது என்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் நபர்கள் உடனடியாக வங்கிகளை சென்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

பான்- ஆதார் இணைப்பு:

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் பலர் இதனை இணைக்காமல் உள்ளதால் மத்திய அரசு தொடர்ந்து இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வருகிறது. பான்- ஆதார் இணைக்காத அவர்களின் வங்கி கணக்குகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

புதிய வீடு வாங்கப்போறீங்களா?… கட்டுமான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?… நீங்கள் கவனிக்க வேண்டியவை!

Wed Aug 30 , 2023
எப்பாடு பட்டாவது சொந்த வீடு கட்டி விட வேண்டும் அல்லது வாங்கிவிட வேண்டும் என்பது பலரின் வாழ்நாள் விருப்பமாக இருக்கிறது. அதனால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வீட்டைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கிறார்கள். இதற்காக முதலில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், இதற்காக, சரியான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதுதான். இன்றைய சூழலில், கட்டுமான நிறுவனங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. முதலில், குறைந்த எண்ணிக்கையில் அதாவது, ஐந்து முதல், 10 வீடுகள் வரை அடங்கிய […]

You May Like