மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையினை இரு மடங்காக உயர்த்தியும் மற்றும் 2013-2014-ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ரூ.6.50 கோடி நிதி ஒப்புதல் வழங்கியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2018- 2019ஆம் நிதியாண்டு முதல் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் சுமார் 52 நலத் திட்டங்கள் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்குள் செயல்படுத்திட மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு அதிகாரப்பகிர்வு வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட செலவினத்தில் ரூ.7,95,02,000 தொகையை 2023-2024-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இருந்து மேற்கொள்ள வேண்டும். மீதமுள்ள தொகை ரூ.6,95,50,000 கூடுதல் நிதியாக ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.