fbpx

நிம்மதி…!மாணவர்களுக்கு இது அவசியம் இல்லை…! பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!

மாணவர்கள் Bonafide certificate தர வேண்டியது கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் மாணவர்களின் பெயரை சேர்பதற்கு, ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து Bonafide certificate பெற்று தர வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்ததற்கான தகவல்களை பெறுவதற்கும், இடை நிற்றலை குறைப்பாதற்கான உதவித்தொகை வழங்கவும், புதுமைப் பெண் திட்டத்தில் மாணவிகளின் விபரத்தை உடனே அளிப்பதற்காகவும் ,தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அதற்கான இட ஒதுக்கீடு வழங்குவற்கு தேவையான தகவல்களை பெறுவதற்காகவே இந்த விபரங்கள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்பொழுது தேர்வு நெருங்குவதால் பொதுத்தேர்வு எழுதும் ,மாணவர்களிடம் உறுதிச் சான்று பெறமால் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அதிர்ச்சி தகவல்: அக்டோபர் மாதமே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட BF.7 வகை வைரஸ்!!! இதுவரை 4 பேர் பாதிப்பு..!

Thu Dec 22 , 2022
கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி பெரும் தாக்கத்தையே ஏற்ப்படுத்தியது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் வெகுவாக குறைந்திருந்தால் நோய்ப்பரவல் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் BF.7 வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்நாட்டு மக்கள் […]

You May Like