தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூட அச்சப்படுகின்றனர். இதுபோன்ற நேரங்களில், தங்கள் வீடுகளை குளிர்ச்சியாக வைத்திருக்க பலரும் ஏசி, கூலர் ஆகியவற்றை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கோடை வெயிலில் ‘சன் ஸ்ட்ரோக்’ (Sun Stroke) அல்லது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat Stroke) ஏற்படுத்தி உயிரே பறிபோகும் அபாயம் உள்ளது. இது குழந்தைகள், வயதானவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் தாக்கக் கூடியதாகவும். எனவே, இந்த ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
ஹீட் ஸ்ட்ரோக்கில் இரண்டு வகைகள் உள்ளன. நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் (Non exertional heat stroke) மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் (Exertional heat stroke). அதாவது, எந்தச் செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படுவது நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதான நபர்களுக்கு ஏற்படும்.
அதேபோல், வெயிலில் நீண்ட தூரம் செல்வது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் (Exertional heat stroke) ஏற்படுகிறது. இளம் வயதினர், விளையாட்டு வீரர்களுக்கு உண்டாகும். எனவே, அதிக வெப்பம் கொண்ட பகுதிகளில் இருப்பதை தவிர்க்க வேண்டும். சீரான இடைவெளியில் தண்ணீர் குடிக்க வேண்டும். நம் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் அளவைவிட 500 மி.லி தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அதேபோல், வெப்பம் அதிகம் தாக்கும் கருப்பு உள்ளிட்ட உடைகளை அணியக் கூடாது. உடலுக்குக் குளிர்ச்சி தரும், பழ வகைகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
➥ கோடைக்காலத்தில் குழந்தைகள், வயதானவர்கள் வெளியே செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அப்படி செல்வதாக இருந்தால், நிறைய தண்ணீர் குடித்துவிட்டு செல்ல வேண்டும்.
➥ அத்துடன், உப்பு கலந்த மோர் அல்லது ஜூஸ் குடிக்கலாம். தலைக்குத் தொப்பி, கூலிங் க்ளாஸ் அணிந்து கொள்வது நல்லது. முடிந்தளவுக்கு குடையை எடுத்துச் செல்லுங்கள்.
➥ தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடலாம்.
➥ கோடைக்காலத்தில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
➥ சத்துள்ள காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
➥ கேழ்வரகு, கம்பு ஆகிய தானியங்களில் செய்யப்படும் கூல் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி தரும்.
➥ வெள்ளரிக்காயை வெட்டி கண்களில் வைத்துக் கொண்டால் உடல் சூடு குறையும்.
➥ கோடையில் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் பாதிப்பு ஏதும் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
➥ வெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதால் தான், சன் ஸ்ட்ரோக் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கலாம்.
➥ வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைக்கலாம்.
➥ உடலில் தாது உப்பு குறையாமல் இருக்க பானைத் தண்ணீரில் ஒரு சிட்டிகை கல் உப்பு, வெல்லம், எலுமிச்சம் பழத்தை பிழிந்து பானமாக குடிக்கலாம். இதை தினமும் 3 முதல் 4 தடவை வரை குடிக்கலாம்.
➥ வெயில் காலத்தில், கேஸ் நிரம்பிய கூல்டிரிங்ஸை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
➥ வெல்லம், மாங்காய் துண்டுகளை கொண்டு ஊறப்போட்ட தண்ணீர் அல்லது வெல்லம் போட்ட புளித்தண்ணீரைத் தினமும் ஒரு கப் குடித்து வந்தால், சன் ஸ்ட்ரோக் ஏற்படுவதை தடுக்கலாம்.
➥ வெயில் காலத்தில், உடலின் சூட்டை அதிகப்படுத்தும் சிக்கன், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், மசாலா பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
Read More : உங்க ரூம் ஹீட்டா இருக்கா..? அப்படினா இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!! டேபிள் ஃபேன் இருந்தால் போதும்..!!