fbpx

தமிழ்நாட்டில் கொளுத்தி எடுக்கும் வெயில்..!! இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்கும்..?

தமிழ்நாட்டில் கடந்த 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், மோக்கா புயல் காரணமாக பரவலாக மழை பெய்தது. இதனால் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று 18 பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியது. கிருஷ்ணகிரி, வேலூர் பகுதிகளில் உச்சபட்சமாக 108 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவானது. திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கரூர் பரமத்தி பகுதிகளில் 105 டிகிரியும், பரங்கிப்பேட்டையில் 104 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அன்றாட பணிகளுக்கு செல்வதே கடும் சிரமமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வெயில் கடுமையாக வாட்டி வதைக்கும் நிலையில், வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை என்றும் அன்றாட பணிகள் எதும் செய்ய முடியவில்லை என்றும் சென்னை மற்றும் வேலூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், உச்சி வெயில் எனப்படும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் குழந்தைகள், முதியோர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Chella

Next Post

பொள்ளாச்சி அருகே வடமாநில கூலித் தொழிலாளி அடித்து கொலை…..! காவல்துறையினர் விசாரணை…..!

Tue May 16 , 2023
பொள்ளாச்சி அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்டாட் மான்ஜி (31) என்பவர் ரமண முதலிபுதூர் பகுதியில் இருக்கின்ற பாட்டில் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. பணி முடிவடைந்த உடன் அருகில் இருக்கின்ற டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, ஏதாவது ஒரு இடத்தில் இரவு தங்கி விட்டு காலையில் பணிக்கு சென்று வருவதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், நேற்று முன்தினம் […]

You May Like