fbpx

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்த போறீங்க…? பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி…?

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் பெயரால் படிக்கப்பட்ட உரையில் தமிழகத்துக்குப் பயன் அளிக்கும் வகையில் எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை. தமிழக அரசு அடுத்த ஓராண்டுக்கு எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் ஆளுநர் உரையில் இல்லாதது வருத்தமளிக்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில்,; 2024-ஆம் ஆண்டுக்கான முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மரபுகளின்படி ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது உரையை படித்து கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார். ஆளுநரின் உரையில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்தத் திட்டமும் இல்லை. 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருப்பதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதமே கடிதம் எழுதியிருந்தார். அப்போதே அதை பாமக கடுமையாக விமர்சித்தது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த அதிகாரம் இருக்கும்போது, அதற்காக மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்றும், சமூக நீதியை காக்கும் விஷயத்தில் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல் என்றும் நான் குற்றஞ்சாட்டியிருந்தேன்.

அதைத் தொடர்ந்து தமிழக முதல்வரை நானே நேரில் சந்தித்து, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் குறித்தும், அவ்வாறு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக விளக்கினேன். ஆனால், அதன்பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறுவது சமூக நீதியைக் காப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையும் இல்லை; தெளிவும் இல்லை என்பதையே காட்டுகிறது. இனியாவது தமிழக அரசு தெளிவு பெற்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் கூடுதலான இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர், தமிழக அரசுத் துறைகளில் 5 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. இரண்டுக்கும் தீர்வு காணும் வகையில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்ற குரல் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

டீக்கடைகளுக்கு எச்சரிக்கை!... அச்சிடப்பட்ட பேப்பரில் பலகாரங்களை விற்கக்கூடாது!… உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

Tue Feb 13 , 2024
டீக்கடை மற்றும் உணவகங்களில் அச்சிடப்பட்ட பழைய பேப்பர்களில் பஜ்ஜி, போண்டா போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில், சென்னை அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகளில் வழங்கப்படும் உணவு பதார்த்தங்களை பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் பொட்டலமாக பொதுமக்கள் வாங்கக் கூடாது என்று சுவரில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன. […]

You May Like