ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமிக்கு அருகில் வர உள்ளது.
2012 KY3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் நாளை பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது…. சூரியனைச் சுற்றி வரும் வழியில் பூமியில் இருந்து 47,84,139 கிலோமீட்டர் தொலைவில் இந்த விண்கல் கடந்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.. மேலும் இந்த 2012 KY3 விண்கல் பூமிக்கு அருகில் உள்ள பொருளாக (NEO) வகைப்படுத்தப்பட்டுள்ளது.. இது அரை கிலோமீட்டர் முதல் ஒரு கிலோமீட்டர் வரை இருக்கும். ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான அகலமுள்ள விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் திறனைக் கொண்டிருப்பதால், இந்த விண்கல் பிளானெட் கில்லர் பொருட்கள் (planet killer objects) என்ற வகைக்குள் அடங்கும்.
எனினும் 2012 KY3 பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது, ஏனெனில் அது 47 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து பூமியை பாதுகாப்பாக கடந்து செல்லும் என்று நாசா கூறியுள்ளது… கடைசியாக இந்த சிறுகோள் 2019 ஜனவரியில் பூமிக்கு அருகில் வந்தது.. அப்போது இந்த விண்கல் 6,82,88,436 கிலோமீட்டர் தொலைவில் வந்தது. . அடுத்த முறை 2025ல் இந்த கிரகத்திற்கு அருகில் வரும்.
சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவான போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் தான் விண்கல் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான வின்கற்கள் வலம் வருகின்றன. விண்கற்கல் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. எனவே பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஆனால் சில சமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை பூமியை கடந்து சென்றால் அல்லது மோதினால் ஆபத்தானதாக இருக்கலாம்.. எனவே, இந்த அச்சுறுத்தல்களை சரியான நேரத்தில் சமாளிக்க, விண்கற்களின் இயக்கங்களை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..