fbpx

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்கும் அமைச்சர் உதயநிதி…! என்ன காரணம்…?

பிரதமர் மோடியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் இன்று நேரில் சந்திக்க உள்ளார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டிகள் இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறுகிறது. சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் 19 முதல் 31-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

போட்டியின் நிறைவு விழாவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நிறைவு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அழைப்பு விடுக்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இன்று பிற்பகல் பிரதமரைச் சந்தித்து அழைப்பிதழை வழங்க உள்ளார். அதேபோல மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் அமைச்சர் உதயநிதி வைக்க உள்ளார். தொடர்ந்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரையும் சந்தித்து நிறைவு விழாவை பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளார்.

Vignesh

Next Post

தமிழகமே...! பொங்கல் பரிசு தொகுப்பு... இது மட்டும் தான் கிடைக்கும்...! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை...!

Thu Jan 4 , 2024
பொங்கல் பரிசுக்கு கொள்முதல் செய்ய ரூ.238 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; கடந்த 2023 அக்டோபர் 31-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என 2 கோடியே 19 லட்சத்து 57,402 பேருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு […]

You May Like