fbpx

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்… வரும் வாரங்களில் கூடுதல் கவனம் தேவை.. எச்சரிக்கும் நிபுணர்கள்..

பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வரும் வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை அதிகரித்துள்ளது.. இந்த வைரஸ் காரணமாக, இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.. கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல், 3 நாட்களில் குணமானாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய 3 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது..

இந்நிலையில் நாடு தழுவிய பருவகால காய்ச்சல் பரவலுக்கு மத்தியில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.. இதனால் ஒரு புதிய ஒமிக்ரான் மாறுபாடு கொரோனா அலை ஏற்படக்கூடும் என்ற கவலையை ஏற்படுத்தி உள்ளது.. மார்ச் 12-ம் தேதி, இந்தியாவில் புதிதாக 514 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.. இது கிட்டத்தட்ட 4 மாதங்களில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.. அதே நேரத்தில், கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,809 ஆக உயர்ந்தது. மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, தெலுங்கானா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா நேர்மறை விகிதம் 0.5 சதவீதமாக இருந்தாலும், சில மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் நேர்மறை விகிதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகள் இன்னும் அதிகரிக்கவில்லை என்று கூறும் நிபுணர்கள் , கொரோனாவுக்கான மரபணு கண்காணிப்பு இந்தியாவில் தற்போது போதுமானதாக இல்லை என்றும் எச்சரித்துள்ளனர்.. வழக்கமான இன்ஃப்ளூயன்ஸா வழக்குகளின் கண்காணிப்பில், இன்ஃப்ளூயன்ஸா A (H1N1 மற்றும் H3N2, மற்றவற்றுடன்) மற்றும் அடினோவைரஸ் போன்ற வைரஸ் சுவாச நோய்க்கிருமிகளின் பரவலாக உள்ளது.. எனவே, சுவாச நோய்களால் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனரா என்பதை சரிபார்க்க மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.. எனவே வரக்கூடிய நாட்கள் முக்கியமானதாக இருக்கலாம்..

’மக்களே கவனமா இருங்க’..! முதல்வரை தொடர்ந்து அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதி..!

அசோகா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய உயிரியலாளர் அனுராக் அகர்வால் பேசிய போது “ கொரோனாவால் தற்போது ஆபத்து இருப்பதாகத் தெரியவில்லை, அதிகமான மக்கள் சுவாச நோய்களால் பாதிக்கப்படுவதால், அதிகமான சோதனைகளின் விளைவாக பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.. ஆனால் நிச்சயமாக, கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தால் அல்லது சோதனை நேர்மறை விகிதம் அதிகரித்தால், அப்போது கூடுதல் கவனம் தேவை…” என்று கூறினார்.

தொற்று நோய் நிபுணர் ஈஸ்வர் கிலாடா பேசிய போது, “ ஒரு அனுமானத்தை எடுப்பதற்கு முன், சில வாரங்களுக்கு பாதிப்பு எண்ணிக்கை முறையைப் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும், இந்தியாவில் ஒரு பெரிய வயது வந்தோர் தற்போது கோவிட்-19 க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வரக்கூடும்.. ஏனெனில் பெரும்பான்மையானவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. கோவிட்-19 பூஸ்டர் டோஸ் மற்றும் காய்ச்சலுக்கு எதிரான வருடாந்திர தடுப்பூசிகளை முதியவர்கள் மற்றும் அடிப்படை நோய்கள் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.. இந்திய தடுப்பூசி தயாரிப்பாளர்கள், காய்ச்சல் தடுப்பூசிகளை உருவாக்க ஊக்குவிக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்தில் தலா 4 மிதக்கும் கப்பல் தளத்துக்கு அனுமதி...!

Tue Mar 14 , 2023
நாட்டின் பொருளாதார சூழலை வலுப்படுத்த சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை சாகர்மாலா திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் மொத்தம் 11 மிதவை இறங்கு தளங்களை அமைக்க அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தளங்கள் குருபுரா, நேத்ராவதி ஆறுகளில் அமைக்கப்பட்டு சுற்றுலா நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும். கூடுதலாக தமிழ்நாட்டில் 4 மிதவை இறங்கு தளங்களுக்கு கொள்கை அடிப்படையில் அமைச்சகம் […]

You May Like