fbpx

இதுக்கு ஒரு முடிவே இல்லையா? மீண்டும் அத்துமீறிய இலங்கை!! தமிழக மீனவர்கள் 18 பேர் நடுக்கடலில் கைது!!

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்று இருந்தனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரைக் கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 18 மீனவர்களையும் விசாரணைக்காக யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more ; யூரோ 2024 | ருமேனியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அபார வெற்றி!!

English Summary

The Sri Lankan Navy has arrested 18 Tamil Nadu fishermen who were fishing between Kachchathivu and Nedunthivu for fishing across the border.

Next Post

Result: 30-ம் தேதி நீட் மறுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்...!

Sun Jun 23 , 2024
NEET re-examination results will be released on 30th

You May Like