மின்சார பேருந்துகள், அவசர ஊர்திகள், மின்சார டிரக்குகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஏதுவாக பிரதமரின் மின்னணுவாசன திட்டத்தின் இது வரை மாநில அரசுகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மின்சார பேருந்துகள், அவசர ஊர்திகள், மின்சார டிரக்குகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஏதுவாக பிரதமரின் மின்னணுவாசன திட்டத்தின் இது வரை மாநில அரசுகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை. நாடு முழுவதும் பழைய, பயன்பாடற்ற மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ஊக்கத்தொகைத் திட்டம் வாகன அழிப்புக் கொள்கை போன்ற கொள்கைகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வகுத்துள்ளது.
வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதற்காக கொள்கையின் கீழ், 05.10.2021 தேதி முதல் ஜி.எஸ்.ஆர் அறிவிப்பு 720 (இ) மோட்டார் வாகன வரியில் சலுகையை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து அல்லாத வாகனங்களாக இருந்தால் இருபத்தைந்து சதவீதம் வரை / போக்குவரத்து வாகனங்களாக இருந்தால் பதினைந்து சதவீதம் வரை வழங்கப்படும் என மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.