மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணிடம் அவருடைய வீட்டில் தீய சக்திகள் உள்ளதாக தெரிவித்து, அதை போக்கிவிட்டால், நீங்கள் செழிப்பாக வாழலாம் என்று பலர் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய அந்த பெண், தன்னுடைய வீட்டில் இருக்கும் தீய சக்தியை ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். இதனால், அவருடைய கணவரின் நண்பர்களின் உதவியை நாடினார். அதேபோல கணவரின் நண்பர்களில் ஒருவருக்கு மாந்திரீகம் தெரியும் என்று கூறப்படுகிறது.
ஆகவே, அந்தப் பெண்ணின் கணவரின் உடம்பிலேயே தீய சக்தி இருப்பதாக தெரிவித்து, அவர்கள் அதை ஓட்ட முயற்சிப்பதாக பல்வேறு வேலைபாடுகளை செய்துள்ளனர். இந்த தீய சக்தி பிரச்சனையில் இருந்து, ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்று கணவரின் நண்பரை தொடர்பு கொண்ட போது கணவரின் நண்பர்கள் பலர் அந்த பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையின் விசாரணை நடத்த தொடங்கினர். அந்த விசாரணையின் முடிவில் அந்தப் பெண்ணின் கணவரின் நண்பர்கள் ஐந்து பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
அந்த பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அந்த ஐவர் மீதும் பல்வேறு தரப்புகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.