இமாச்சல் பிரதேசம் உனா மாவட்டத்தை சேர்ந்த இளைஞனுக்கும், சிங்கா கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் புரோக்கர்மூலம் திருமண ஏற்பட நடந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்காமலேயே போனிலேயே பேசி வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில், இருவரிடமும் சம்மதம் பெற்று இந்த திருமண ஏற்பாட்டை செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக மணமகளை அழைத்து வருவதற்காக சிங்கா கிராமத்துக்கு மணமகன் வீட்டார் 10 கார்களில் கிளம்பி சென்றார்கள்..
அதில் மாப்பிள்ளையும் ஒருவர்… முதல்முதலாக மணப்பெண்ணை நேரில் பார்ப்பதற்காக ஆர்வமுடன் வந்திருந்தார். திடீரென 10, 15 கார்கள் ஊருக்குள் வருவதை பார்த்த கிராம மக்கள், நீங்கள் எல்லாம் யார்? எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.. அதற்கு மாப்பிள்ளை வீட்டினர், திருமண ஊர்வலத்துக்காக வந்துள்ளோம், இந்த ஊரில்தான் பெண் எடுத்துள்ளோம்.. இதுதான் பெண்ணின் போட்டோ என்று சொல்லி, பெண்ணின் புகைப்படத்தை செல்போனில் காட்டினார்கள்.
அந்த போட்டோவை பார்த்த கிராம மக்கள், இப்படியொரு பெண் எங்கள் கிராமத்தில் கிடையாது,.. நீங்கள் சொல்வது போல இங்கே எந்த திருமண ஏற்பாடுகளும் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.. உடனடியாக பக்கத்துவீட்டு புரோக்கர் தம்பதிக்கு போனை போட்டு விஷயத்தை சொன்னார்கள்..
உடனே அந்த தம்பதியினர், “நீங்கள் எல்லாரும் அங்கேயே இருங்கள், நாங்களே அந்த கல்யாணப் பெண்ணை, காரில் அழைத்து வருகிறோம்” என்று சொல்லிவிட்டு, தப்பித்து ஓடிவிட்டார்கள்.. இந்த திருமண ஏற்பாட்டிற்காக, முன்கூட்டியே 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் பணத்தையும் அந்த தம்பதியினர் பெற்று விட்டார்களாம். மணமகள் இல்லாமலேயே, திருமண ஊர்வலம் நடத்தி வந்து ஏமாந்துபோன மணமகள் குடும்பத்தினர், என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர்.. பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.