fbpx

சூப்பர் வாய்ப்பு…! மாணவர்களே வரும் 17-ம் தேதி கல்விக்கடன் வழங்கும் முகாம்…! ஆட்சியர் அறிவிப்பு…!

வரும் 17-ம் தேதி கல்விக்கடன் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வருகிற 17.11.2023-ம் தேதியன்று தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி பிரதான சாலை குண்டலப்பட்டியில் இயங்கி வரும் வருவான் வடிவேலன் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வங்கியாளர்களும், அரசு அதிகாரிகளும் கல்லூரி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள், இக்கல்விக்கடனுக்கு தற்போது கல்லூரியில் படித்து வரும் தருமபுரி மாவட்ட இளங்கலை மற்றும் முதுகலை சார்ந்த முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இம்மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டு வெளி மாவட்டத்தில் / மாநிலத்தில் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் . நர்சிங், பரர்மஸி, கலை மற்றும் அறிவியல், கல்வியியல் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்விணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரன்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கலந்தாய்வு கடிதம், கல்லூரி சேர்க்கை கடிதம், நன்னடத்தை சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், போன்ற ஆவணங்கள் தேவை, கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை ஒட்டப்பட்டி, தருமபுரி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 8925533941, 8925533942 மற்றும் 04342- 230892 ஆகிய எண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்விக் கடன் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இடைவிடாத கனமழை!… இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

Wed Nov 15 , 2023
தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (புதன்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் […]

You May Like