fbpx

பொது மக்களின் கவனத்திற்கு…! ரேஷன் பொருட்கள் தொடர்பாக இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…! முழு விவரம் உள்ளே…!

ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம்‌ / சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ முறைகேடாக கள்ளச்சந்தையில்‌ விற்று அதிக லாபம்‌ ஈட்டும்‌ நோக்கத்துடன்‌ செயல்பட்டு வருகின்றனர்‌.

உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ குடிமைப்‌ பொருள்‌ குற்றப்‌ புலனாய்வுத்‌ துறை அலுவலர்கள்‌ ஆகியோர்‌ தொடர்‌ ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல்‌ மற்றும் பதுக்கல்‌ தொடர்பான தடுப்பு பணிகளில்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌. அத்தியாவசியப்‌ பண்டங்கள்‌ கடத்தல்‌ மற்றும்‌ பதுக்கலில்‌ ஈடுபடும்‌ நபர்கள்‌ மற்றும்‌ அதற்கு உடந்தையாக செயல்படும்‌ நபர்கள்‌ மீதும்‌ கடத்தலுக்கு பயன்படுத்தப்படும்‌ வாகனங்கள்‌ மீதும்‌ இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ சட்டம்‌ 195இன்‌ படி வழக்கு பதிவு செய்து உரிய மேல்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு, தொடர்‌ குற்றச்‌ செயல்களில்‌ ஈடுபடும்‌ நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும்‌ இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ வழங்கல்‌ பராமரிப்பு சட்டம்‌ 1980ன்‌ படி தடுப்பு காவலில்‌ வைக்க நடவடிக்கைகளும்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 27.02.2023 முதல்‌ 05.03.2023 வரையுள்ள ஒரு வார காலத்தில்‌ கள்ளச்சந்தையில்‌ விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.89,21,899/- மதிப்புள்ள 658 குவிண்டால்‌ பொது விநியோகத்திட்ட அரிசி, 45 எரிவாயு உருளைகள்‌, 250 கிலோ கோதுமை, 25 கிலோ துவரம்பருப்பு, 1,21,000 கருப்பு ஆயில்‌, வெள்ளை ஆயில்‌ மற்றும்‌ கலப்பட டீசல்‌ ஆகியவையும்‌, மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 43 வாகனங்களும்‌ கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

இந்தியாவில் 30% இளைஞர்கள் கல்வி, வேலையில்லாமல் உள்ளனர்!... கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி!

Thu Mar 9 , 2023
இந்தியாவில் 15 வயது முதல் 24 வயதுடைய 30% இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்தியாவில் கல்வி வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. கருத்துக்கணிப்பின் முடிவில், இந்தியாவில் 15 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் 29.3% பேர் கல்வி […]

You May Like