fbpx

நடப்பு ஆண்டில் புதிய விலையில் நெல் கொள்முதல்… விவசாயிகளுக்கு தமிழக அரசு குட் நியூஸ்…!

நடப்பாண்டிலும் (2024-25) 1.9.2024 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-2003 காரிஃப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராகச் செயல்பட்டு ஒவ்வொரு பருவத்திலும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. நெல் விவசாயிகள் நலன் கருதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத்தந்ததால் 2022-2023 காரிஃப் பருவத்திலிருந்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

2023 24 காரிஃப் பருவத்தில் 31.07.2024 வரை 3200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,85,943 விவசாயிகளிடமிருந்து 33,24,166 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 7,277,77 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2024-2025 காரிஃப் பருவத்திற்கு சன்னரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.2320/- உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 130/- சேர்த்து சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2450/- என்ற விலையிலும் பொதுரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2300/- உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 105/- சேர்த்து பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2405/- என்ற விலையிலும் நெல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்குத் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும். ஆதலால், விவசாயிகள் 01.09.2024 முதல் புதிய கொள்முதல் விலையில் தங்களது நெல்லினை அரசு சார்பில் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

The Tamil Nadu government has announced that paddy will be purchased at new prices this year as well.

Vignesh

Next Post

2030-ம் ஆண்டுக்குள் மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்க திட்டம்...!

Sat Aug 3 , 2024
Plan to eradicate malaria by 2030

You May Like