fbpx

தொடங்கியது 2023…! இந்த ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை…! முழுசா நோட் பண்ணி வைங்க…!

இந்த ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

2023-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகள், கழகங்களுக்கும் இந்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தப் பொது விடுமுறை நாள்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் அனைத்து வாரியங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும் எனவும் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து அலுவலகங்களும், பின்வரும் நாள்களில் மூடப்படவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பொது விடுமுறை நாள்களாக குறிப்பிடப்பட்ட “ஞாயிற்றுக் கிழமைகளுடன்” பின்வரும் நாள்களும், 2023-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாள்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அரசு விடுமுறை அறிவித்துள்ள நாட்களில், ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தைபூசம், விநாயகர்சதூர்த்தி, தீபாவளி ஆகிய முக்கிய விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும், ரம்ஜான் மொகரம் பண்டிகைகள் சனிக்கிழமைகளிலும் வருகிறது. பொங்கல் கிறிஸ்துமஸ் தமிழ்புத்தாண்டு ஆகியவற்றை ஒட்டி தொடர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கவலை வேண்டாம்...!ஆதாருடன் வீட்டில் இருந்து நீங்களே இணைக்கலாம்...! எப்படி தெரியுமா...?

Sun Jan 1 , 2023
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி; மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், 2023 ஜனவரி 31 ம் தேதிக்கு பிறகு மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க […]

You May Like