வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் நில உரிமையாளர்களின் சாகுபடி விவரம் மற்றும் குத்தகைதாரர்களின் விவரம் மற்றும் அவர்களின் ஆதார் எண்ணுடன் Agri stack amd Grains செயலி மூலம் உள்ளீடு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டத்திற்குட்பட்ட பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டங்களில் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளபடி, வேளாண் அடுக்கு மற்றும் GRAINS என்ற திட்டத்தின்மூலம், வேளாண்மை உழவர்களின் நலத்திற்காக நில உரிமையாளர்களின் விவரங்கள், சாகுபடி விவரம் மற்றும் குத்தகைதாரர்களின் விவரம் ஆகியவற்றுடன் விவசாயிகளின் ஆதார் எண், புகைப்படம், மற்றும் வங்கி கணக்கு எண் விவரங்கள், நிலப்பட்டா ஆகிய விவரங்கள் குறித்து, பிரதி வாரங்களில் புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் சம்பந்தப்பட்ட கிராமங்களில் முகாம் அமைத்து மேற்படி, விவரங்களை நில உரிமையாளர்களிடமிருந்து பெற்று Agri Stack மற்றும் GRAINS செயலியில் சம்மந்தபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.
மேற்படி, முகாமில் சம்மந்தப்பட்ட வேளாண் அலுவலர்களும் கலந்து கொண்டு மேற்படி பணியினை முடிக்குமாறும், மற்றும் சம்மந்தப்பட்ட கிராமங்களை குறுவட்ட வாரியாக தேர்வு செய்து கிராமங்களைபட்டியலிட்டு, செயல்முறை ஆணைகள் தயார் செய்து அனுப்பி வைக்குமாறு பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.