fbpx

ரேஷன் அட்டைதாரர்களே..!! ஜூலை மாத ரேஷன் பொருட்களை இந்த மாதம் பெற்றுக் கொள்ளலாம்!! – தமிழ்நாடு அரசு

ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

2024 ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், 2024 ஜூலை மாதத்தில் அதனை பெற்றுக் கொள்ளலாம் என சட்டமன்றத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 2024 ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக 2024 ஜுலை மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஜூலை மாதத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தினால், குடும்ப அட்டைதாரர்களால் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை.

ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள், அவற்றை ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; வயநாடு நிலச்சரிவு..!! ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் பகத் பாசில், நஸ்ரியா ஜோடி..!!

English Summary

The Tamil Nadu government has informed that the family card holders who did not receive duram dal and palm oil for the month of July can get it in the month of August.

Next Post

உலகில் இரத்த மழை பெய்யும் நாடு!. எது?. என்ன காரணம் தெரியுமா?. சுவாரஸ்யங்கள்!

Fri Aug 2 , 2024
The country that rains blood in the world! Which one? Do you know what the reason is? Interesting!

You May Like