fbpx

சூப்பர் உத்தரவு… காவல் உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை….! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில்‌ காவலர்கள்‌ எவ்வித ஓய்வும்‌ இன்றி தொடர்ந்து பணிபுரிவதால்‌ மனதளவில்‌ சோர்வடைகிறார்கள்‌. இதனால்‌ அவர்கள்‌ உடல்‌ நலனும்‌ பாதிப்படைந்து அவர்கள்‌ பணித்திறன்‌ பாதிக்கும்‌ ஆபத்து உள்ளது. 1977-ம்‌ ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய போலீஸ்‌ கமிஷன்‌ மற்றும்‌ அதன்பிறகு வந்த போலீஸ்‌ கமிஷனிலும்‌ காவலர்களுக்கு வார விடுமுறை அளிப்பது தொடர்பாக பரிசீலனை செய்வது குறித்து உறுதியாக தெரிவித்துள்ளனர்‌. வாரத்தில்‌ ஒரு நாளாவது காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்‌ என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர்களுக்கும், சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; ஏற்கனவே காவல் ஆளிநர்களுக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றுவதை தொடர்ந்து தற்பொழுது 15 நாட்களுக்கு ஒரு முறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும். இதனால் பத்தாயிரத்தி 508 பேர் பயனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இனி செம ஜாலி... மாணவர்களுக்கு Home work கட்டாயம் தரக்கூடாது...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...! இவர்களுக்கு மட்டும் தான்...

Wed Aug 17 , 2022
1,2-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழகத்தில் தொடக்க நிலை வகுப்புகளில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுத்து அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும், அதிக எண்ணிக்கையிலான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் மூலம் குழந்தைகளை அதிக எடை கொண்ட புத்தகப் பைகள் சுமப்பதை தவிர்க்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் ஏற்கனவே […]

You May Like