fbpx

தமிழகம் முழுவதும் மொத்தம் 20 அதிரடி மாற்றம்…! அரசு வெளியிட்ட முழு பட்டியல் இதோ…!

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விடுமுறையில் இருந்த டிஜிபி பிரஜ் கிஷோர் ரவிக்கு ஊர்காவல்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தீயணைப்பு துறை டிஜிபியாக இருந்த பிரஜ் கிஷோர் ரவி ஊர் காவல்படை டிஜிபியாக பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை டிஜிபியாக இருந்த ஆபாஷ் குமாரை தீயணைப்பு துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை காவல் ஆணையராக இருந்த செந்தில்குமார் சென்னை டிஜிபி அலுவலக பொதுப்பிரிவு ஐஜியாகவும்,திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் சென்னை சமூக நலன் பிரிவு ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை தலைமையிட ஏடிஜிபி வெங்கட்ராமன் சென்னை நிர்வாக பிரிவு ஏடிஜிபியாகவும், அமலாக்கப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் பொருளாதார குற்றத் தடுப்புப்பிரிவு ஐஜி ஆகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

Vignesh

Next Post

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா...? வானிலை மையம் சொன்ன தகவல்...!

Sat Dec 31 , 2022
தமிழகத்தில் ஜனவரி 3-ம் தேதி வரை வரண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை […]

You May Like