fbpx

தமிழகமே…! இனி இதற்கு அனுமதி பெறுவது அவசியம்…! முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை…!

தமிழகத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு வழங்கப்பட்டு இருந்த முன் அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act, 1946 Central Act XXV of 1946) ன் பிரிவு 6ன்படி வகுக்கப்பட்டுள்ளது. கடந்த 1989 மற்றும் 1992ம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழக அரசு திரும்ப்பெற்று ஆணையிட்டுள்ளது.

இதன்படி மத்திய புலனாய்வுத் துறை, தமிழத்தில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழக அரசின் முன் அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.இதுபோன்ற, ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலங்கான போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆஹா...! 18 முதல்‌ 35 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு முகாம்...! ஆட்சியர் அறிவிப்பு...!

Thu Jun 15 , 2023
படித்து வேலை வாய்ப்பற்ற இளைளர்களுக்கு காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மற்றும்‌ மாவட்ட நிர்வாகம்‌ சார்பில்‌ காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ இலவச தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ 2023-ஆம்‌ ஆண்டு ஜுன்‌ மாதத்தில்‌ 16.06.2023 வெள்ளிக்கிழமை அன்று தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெற உள்ளது. இம்முகாமில்‌ தனியார்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ திறன்‌ பயிற்சி அளிக்கும்‌ நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு தங்களுக்கான மனித வள […]

You May Like