fbpx

2024 ஐப்பசி மாதம் பௌர்ணமி.. ஆன்மீக தளங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! – சூப்பர் அறிவிப்பு

நவம்பர் 15 பௌர்ணமி மற்றும் 16 சனி, 17 ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. நவம்பர் 15ஆம் தேதி கிளாம்பக்கத்தில் இருந்து 460 பேருந்துகளும், 16ஆம் தேதி 245 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,” 15/11/2024 (வெள்ளிக் கிழமை) பௌர்ணமி, 16/11/2024 (சனிக்கிழமை) வார விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 15/11/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 460 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

16/11/2024 (சனிக்கிழமை) அன்று 245 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 15/11/2024 மற்றும் 16/11/2024 ( வெள்ளி மற்றும் சனிக் கிழமை) அன்று 81 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பௌர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 15/11/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 265 பேருந்துகளும் 16/11/2024 (சனிக்கிழமை) அன்று 85 பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 15/11/2024, 16/11/2024 அன்று 11 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 15/11/2024, 16/11/2024 அன்று 05 பேருந்துகளும், ஆக 366 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்படி, ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக் கிழமை அன்று 5,969 பயணிகளும் சனிக்கிழமை அன்று 2,973 பயணிகளும் திங்கள் கிழமை அன்று 7,080 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.” என கூறப்பட்டுள்ளது.

Read more ; டெல்டா மக்களே.. செம சம்பவம் லோடிங்.. ரெயின் கோட், குடையை மறக்காதீங்க..!! வெதர்மேன் அலர்ட்.. அப்போ சென்னை?

English Summary

The Tamil Nadu Government Transport Corporation has announced that special buses will be run on November 15 full moon and 16 Saturday and 17 Sunday holidays.

Next Post

உஷார்!. பச்சை குத்திக்கொண்ட 68 பெண்களுக்கு HIV!. உ.பி.யில் அதிர்ச்சி!

Wed Nov 13 , 2024
68 women in UP infected with HIV for getting tattoos on their bodies

You May Like