நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் என்ற பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளை செல்போனில் தவறாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் பாத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் கீரம்பூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் அங்குள்ள மாணவிகளை தனது செல்போனில் தவறாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக அவர்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுல எடுத்து மாணவியின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் இன்று காலை பள்ளியின் முன் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்தால் தான் போராட்டத்தை திரும்ப பெறுவோம் எனக் கூறி அந்த ஆசிரியருக்கு எதிராக கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது நாள் நிலைமை மோசமாவதை உணர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் மற்றும் போலீஸ் டிஎஸ்பி கலையரசன் தலைமையிலான காவல்துறையினர் கூடியிருந்த பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் பிடிவாதமாக ஆசிரியரை கைது செய்தால் தான் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என தெரிவித்தனர். மேலும் பள்ளிக்குள் இருந்த ஆசிரியரை காவல்துறையினர் வெளியே கொண்டு வர முயற்சித்த போது பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியை சர்மிளாவிடம் காவல்துறை விசாரணை நடத்தி இருக்கிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் தற்போது பரமத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். அதன் பிறகு நாங்கள் கைது செய்து அவர் மீது உரிய நடவடிக்கையை எடுப்போம் என மாவட்ட கண்காணிப்பாளர் கலையரசன் உறுதி அளித்துள்ளார். ஆசிரியரே மாணவிகளை செல்போனில் தவறாக படம் பிடித்து சம்பவம் அப்பகுதி இருக்கக்கூடிய பெற்றோர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.