fbpx

இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்ற வாலிபர்..!! உள்ளே இருந்த 2 பேர்..!! மாறி மாறி கூட்டு பலாத்காரம்..!!

திரிபுரா மாநிலம் அமடாலி பைபாஸ் சாலையில், இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, இளம் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்பொழுது அந்தப் பெண்ணை சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், கல்லூரி மாணவியான அவர் இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, மாணவிக்கு தெரிந்த கௌதம் சர்மா என்ற வாலிபர் மாணவியை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, காரில் இருந்த கௌதம் சர்மாவின் நண்பர்கள் 2 பேர் மாணவியிடம் அத்துமீறி நடந்துள்ளனர்.

இதையடுத்து, கௌதம் சர்மா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அமடாலி பைபாஸ் சாலையில் மாணவியை காரில் இருந்து தள்ளி விட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாணவியரின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கௌதம் சர்மாவை கைது செய்தனர். மேலும், போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

ஆன்மாக்களுடன் பேச வைப்பதாக தெரிவித்த கேரளா மந்திரவாதி……! 2 கோடி ரூபாயை பறிகொடுத்த சென்னையை சேர்ந்த 51 வயது நபர்…..!

Fri May 12 , 2023
சென்னை புரசைவாக்கம் ஆண்டர்சன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் சிவகாமி(51). ஐடி நிறுவன ஊழியரான இவர், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில், கடந்த 2005 ஆம் வருடம் நைஜீரியா நாட்டில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் நான் பணியாற்றி வந்தேன். என்னுடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (52) என்பவரும் பணியாற்றி வந்தார் என கூறியுள்ளார். மேலும் அப்போது […]

You May Like