fbpx

பொதுமக்களின் குறை தீர்ப்புக்கான கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 13 நாட்களாக குறைப்பு…!

பொதுமக்களின் குறை தீர்ப்புக்கான கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 13 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், பொதுமக்கள் குறைகளைத் தீர்ப்பதில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துரைத்தார். குறைகளைத் தீர்ப்பதற்கான சராசரி கால அவகாசம் 30 நாட்களிலிருந்து 13 நாட்களாகக் குறைந்துள்ளதாகவும், விரைவில் இது மேலும் குறைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

காணொலி காட்சி மூலம் பொதுமக்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கான தேசிய பயிலரங்கில் பேசிய அமைச்சர் 2007-ல் தொடங்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் பத்து சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது குறைதீர்ப்பு நிர்வாகத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்த முன்னேற்றங்கள் அக்டோபர் 2024-ல் மட்டும் 1,16,000-க்கும் மேற்பட்ட குறைகள் பதிவு செய்யப்படுவதற்கு வழிவகுத்தது. நிலுவையில் உள்ள குறைகள் மத்திய செயலகங்களில் 53,897 ஆக குறைக்கப்பட்டுள்ளன.

“தொடர்ச்சியாக 28 மாதங்களாக, மத்திய செயலகங்கள் ஒவ்வொரு மாதமும் 1,00,000-க்கும் மேற்பட்ட குறைகளைத் தீர்த்துள்ளன” என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பல குடிமக்கள் கருத்துக்கணிப்புகளில் நேர்மறையான கருத்துக்களை வழங்கியதாகவும், இது அரசின் முயற்சிகளில் வளர்ந்து வரும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறை தீர்க்கும் முறையை மேலும் நவீனப்படுத்த செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகியவற்றால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதாகவும் அறிவித்தார்.

English Summary

The time limit for adjudicating public grievances has been reduced from 30 days to 13 days.

Vignesh

Next Post

பெண்களே..!! கர்ப்பமாக இருக்கும்போது இந்த பொருட்களை பயன்படுத்தாதீங்க..!! குழந்தைக்கு ஆபத்தாம்..!!

Tue Nov 19 , 2024
Formaldehyde is used in most skin care products.

You May Like