நீலகிரி மாவட்ட பகுதியில் பெட்டட்டியில் ஜெயக்குமார் தனது மனைவி அனுசியா என்பவருடன் வசித்து வருகிறார். மனைவி நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான இருந்த நிலையில், சென்ற 10 ஆம் தேதி குன்னூரில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பின்னர் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து ஒரு நாள் ஆன போதும் மயக்கம் தெளியாததால் அவரது குடும்பத்தினர் பெண்ணை கோவை மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனுசியா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர், சந்தேக மரணம் என்ற பெயரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பிறந்து 11 நாட்களிலே தாய் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.