fbpx

பரபரப்பு.. டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு..!! பின்னணியில் இருப்பது யார்? வெளியான தகவல்!!

நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில். அதில், போட்டியிடவுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரச்சார மேடையில் டிரம்ப் பேசி கொண்டு இருந்த நிலையில், திடீரென மர்ம நபர் டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் குண்டு உரசி சென்ற நிலையில், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.  மேலும், இந்த தாக்குதலில், டொனால்டு டிரம்ப் காயத்துடன் தப்பிய நிலையில், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.  

டிரம்ப்பை சுட்டதாக நம்பப்படும் 2 நபர்கள் சீக்ரெட் சர்வீஸ் வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அவர் பென்சில்வேனியாவின் பெத்தெல் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

என்ன காரணத்திற்காக டிர்மப் மீது இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என தெரியவராத நிலையில் அதுகுறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். டிரம்ப் பேசிக் கொண்டு இருந்த நிகழ்ச்சி மேடையில் இருந்து சரியாக 130 அடி தூரத்தில் உள்ள கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது. அதேநேரம் கட்டடத்தின் மீது சந்தேகப்படும் வகையில் இளைஞர் நின்று கொண்டு இருப்பதை கண்டு பிரசாரத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் ஆனால் அது குறித்து பாதுகாப்பு படையினர் எந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நீதித்துறைக்குச் சொந்தமான அரச முகவர் (FBI) கொடுத்த தகவலின் படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 20 வயதுடையவர் என தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள தகவலின்படி ”டொனால்ட் டிரம்ப் கொலை  முயற்சியில் ஈடுபட்டவர்  பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பதும், அவருக்கு 20 வயது என்பதையும் தெரிவித்தனர்.

மேலும், அந்த நபர் எதற்காக கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற காரணம் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், அந்த நபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியா பேரணியில் ஈடுபட்டு கொண்டு இருந்ததை நோட்டமிட்டு பேரணி நடைபெறும் இடத்திற்கு வெளியே உயரமான இடத்தில் இருந்து சுட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

English Summary

The US presidential election is about to take place. In it, the incident of shooting at former US President Donald Trump, who is going to compete, has caused a stir

Next Post

ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தது ஏன்? - போலீசார் விளக்கம்

Sun Jul 14 , 2024
In the Armstrong murder case, the police have given an explanation regarding the encounter with the rowdy Thiruvenkadam.

You May Like