வங்க தேச அமைதி இன்மைக்கு அமெரிக்கா செய்த சதி வேலை தான் காரணம் என்ற ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப்பணியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் முடிவை எதிர்த்து, ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடையவே, ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
அதனைத்தொடார்ந்து, வங்க தேசத்தில் ராணுவ ஆட்சிப் பொறுப்பேற்றது. இதனிடையே இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து நான் வெளியேற அமெரிக்காவே காரணம் என கூறியிருந்தார். இந்நிலையில் தனக்கு எதிராக சதி அமெரிக்கா சதி என்ற ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டுக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறுகையில், எங்களுக்கு வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்களை காரணம் என சொல்வது முற்றிலும் பொய்.
அரசின் எதிர்காலத்தை வங்கதேச மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஹசீனா அரசு எடுத்த கடுமையான அடக்குமுறை நடவடிக்கைதான், போராட்டத்தை தீவிரப்படுத்தியது. ஷேக் ஹசீனா அரசு மாணவர்களை கடுமையாக ஒடுக்கியது. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க இடைக்கால அரசு எடுக்கும் முயற்சிகளை உன்னிப்பாக கவனிக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.
Read more ; தூக்கத்தில் நடந்த துயரம்..!! உயிரை காவு வாங்கிய பிரிட்ஜ்..!! மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி..!!