மாடு தோல், எலும்புகள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்; வெண்மைப் புரட்சி 2.0 ஐ நோக்கி நாடு முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், நிலைத்தன்மை மற்றும் சுழற்சியின் முக்கியத்துவம் முன்னுரிமை பெறுகிறது. முதல் வெண்மைப் புரட்சியின் உதவியுடன் இதுவரை படைத்துள்ள சாதனைகளோடு பால்வளத் துறையில் நிலைத்தன்மை மற்றும் சுழற்சி ஆகிய அம்சங்கள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். வெண்மைப் புரட்சி 2.0 இன் முக்கிய குறிக்கோளாக நிலைத்தன்மை மற்றும் சுழற்சி அமைந்துள்ளது.
நாட்டின் கிராமப்புற வளர்ச்சியிலும், நிலமற்ற, சிறு விவசாயிகளின் மேம்பாட்டிற்கும் பால்வளத் துறை பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டின் ஊட்டச்சத்து மேம்பாட்டை உறுதி செய்வதுடன் பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய உதவிடும். விவசாயிகள் வேளாண் விளைபொருட்களிலிருந்து கிடைக்கும் வருவாயைத் தவிர விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தையும் இது வழங்கியுள்ளது என்றார்.
5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உருவெடுக்கச் செய்வது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவது, 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது ஆகியவையே அந்த மூன்று இலக்கங்கள். இந்த மூன்று இலக்குகளை அடைவதற்கு, ஒவ்வொரு துறையிலும் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் கண்டறிந்து முழுமையாகப் பயன்படுத்துவதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும். சுழற்சி தொடர்பான சிறந்த நடைமுறைகளை 250 பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் பால்வளத் துறைக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாட்டு சாணத்தை மட்டுமல்ல; மாடுகளின் தோல் மற்றும் எலும்புகளையும் பதப்படுத்தி பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். அவற்றை முறைப்படுத்தப்படாத வணிகர்களுக்கு விற்பதற்கு பதிலாக கூட்டுறவு சங்கங்கள் அவற்றைப் பதப்படுத்தி காலணி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்றால், அதன் மூலம் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என கூறினார்.