fbpx

இந்தியன்-2 பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை வீடியோ எடுத்து மாட்டி விட்ட கணவன்..!!

இந்தியன்-2 பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை கணவரே காட்டிக்கொடுத்து வீடியோ வெளியிட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டா நகராட்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் திவ்யா ஜோதி. இவரது கணவர் ஸ்ரீபாத். திவ்ய ஜோதி வேலை செய்யும் இடத்தில் லஞ்சம் வசூல் செய்து வந்துள்ளார். மேலும் அந்த பணத்தை தனி அறையில் பதுக்கியும் வைத்துள்ளார்.

இதனை கண்டுபிடித்த கணவன் மனைவியின் நடவடிக்கையை கண்டித்துள்ளார். அதனை கண்டுக்காமல் தொடர்ந்து லட்சம் வாங்கி பணத்தை சேர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். மேலும், மனைவி லஞ்சம் வாங்கிய பணத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

லட்சம் வாங்கி இதுவரை 30 லட்சம் ரூபாய் சேர்த்துள்ளதாக ஸ்ரீபாத் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், தனது மனைவி திவ்ய ஜோதி லஞ்சம் வாங்கும் ஊழல் நடவடிக்கைகளுக்கு தனது மனையின் அண்ணன் சரத் குமார் உடந்தையாக இருக்கிறார் என்றும் அவர் கிரிமினல் புத்தி கொண்டவர் என்றும், லஞ்சப் பணம் வாங்குமாறு திவ்ய ஜோதிக்கு அவர்தான் அழுத்தம் கொடுப்பதாகவும் சுவர்ண ஸ்ரீபாத் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது, ​​இந்த வீடியோ வைரலானதை அடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்தியன் 2 பட காட்சிகள் போல் இந்த சம்பவம் அமைந்துள்ளதாக இணைய வாசிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read more ; ரத்தன் டாடாவின் ஆரோக்கியத்திற்கான அர்ப்பணிப்பு..!! டாடா சால்ட் தோற்றத்தின் நோக்கம் என்ன?

English Summary

The video of the husband betraying his wife who took a bribe in the style of Indian-2 is going viral on social media.

Next Post

மழை வெளுத்து வாங்கப்போகுது.. 16 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை.. எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா?

Thu Oct 10 , 2024
Rain is going to be heavy.. Heavy rain warning in 16 districts.. Do you know which districts?

You May Like