fbpx

வைரலான மாணவியின் வீடியோ..!! உடனே ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்..!!

நடிகர் ராகவா லாரன்ஸ், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இவர் ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து செயல்பட இருக்கிறார். செஃப் வினோத், அறந்தாங்கி நிஷாவும் இணைந்து செயல்பட உள்ளனர். இந்தக் அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள், தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், 10 டிராக்டர்கள், 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டன.

இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கூறுகையில், ”இரண்டு மாதம் முன் எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அதுதான் இந்த மாற்றத்தின் துவக்கம். நான், அதைச் செய்யப்போகிறேன். இதைச் செய்யப்போகிறேன் என சொல்ல மாட்டேன், செய்துவிட்டு சொல்கிறேன். செஃப் வினோத், மாற்றம் மூலம் என்ன செய்யப்போகிறீர்கள் என்றார். ‘மக்களைத் தேடிப்போய் குறைகள் கேட்டு வரப்போகிறேன்’ என்றேன். ‘போகும் போது சொல்லுங்கள், அதற்கான சாப்பாட்டை கவனித்துக் கொள்கிறேன்’ என்றார். அவருக்கு கடவுள் மனது. அறந்தாங்கி நிஷா, இணைந்து பணியாற்றுவோம் என்றார். எஸ். ஜே. சூர்யாவிடம், மாற்றம் பற்றி சொன்னேன். நானும் அதில் இணைகிறேன் என்றார். இது கடவுளின் ஆசிர்வாதம். இணைந்து பயணிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான், புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியது நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசங்கரை கிராமத்தைச் சேர்ந்த ஸ்வேதா என்ற மாற்றுத்திறனாளி மாணவி, தனக்கு பிறவியிலேயெ 2 கால்களும் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதாகவும், தன்னால் நடக்க முடிந்தால் தனது கல்வி மேம்படும் என்றும் வீடியோ வெளியிட்டு உதவி கேட்டிருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், அந்த மாணவியை நேரில் சந்தித்து, கால்களோடு பொருத்தி நடக்கும் செயற்கை இணைப்பானை வழங்கி உதவினார்.

Read More : BREAKING | மத்திய பட்ஜெட் எதிரொலி..!! தங்கம் விலை ரூ.2,080 குறைந்தது..!! நகைப்பிரியர்கள் செம குஷி..!!

English Summary

Actor Raghava Lawrence’s help to a differently-abled student from Pudukottai has brought resilience.

Chella

Next Post

”நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட் தான் இது”..!! ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!!

Tue Jul 23 , 2024
Leader of Opposition Rahul Gandhi has criticized the budget tabled in the Lok Sabha for saving the seat.

You May Like